இந்தியாவுக்கு வான் பாதுகாப்பு ரேடார்களை டெலிவரி செய்த இஸ்ரேல் !!

  • Tamil Defense
  • September 3, 2022
  • Comments Off on இந்தியாவுக்கு வான் பாதுகாப்பு ரேடார்களை டெலிவரி செய்த இஸ்ரேல் !!

இந்தியா தரைப்படைக்கான Sky Capture ஸ்கை கேப்சர் வான் பாதுகாப்பு ரேடார்களை இஸ்ரேலுடைய இஸ்ரேலிய ஏரோஸ்பேஸ் தொழிற்சாலை நிறுவனம் டெலிவரி செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுமார் 550 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான இத்தகைய 66 வான் பாதுகாப்பு ரேடார்களை இந்தியாவின் ஆல்ஃபா Alpha நிறுவனத்துடன் இணைந்து தொழில்நுட்ப பரிமாற்ற அடிப்படையில் தயாரித்து டெலிவரி செய்துள்ளது, இதற்கான ஒப்பந்தம் கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கையெழுத்தானது.

இந்த வான் பாதுகாப்பு ரேடார்களை கொண்டு VSHORAD அதாவது குறுகிய தூரத்தில் உள்ள வான் இலக்குகளை வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகள் மற்றும் வான் பாதுகாப்பு துப்பாக்கிகளை ஒருங்கிணைத்து தாக்கி அழிக்க உதவும் , இந்த ரேடார் ஒரு கட்டளை மற்றும் கட்டுபாட்டு அமைப்பு என்பது இதன் சிறப்பாகும்.

இதிலுள்ள பல்வேறு தொழில்நுட்பங்கள் மற்றும் அமைப்புகள் உதாரணமாக சென்சார்கள், FCS எனப்படும் தாக்குதல் கட்டுபாட்டு அமைப்பு, IFF எனப்படும் அடையாளம் காணும் அமைப்பு ஆகியவற்றை இஸ்ரேலின் IAI மற்றும் ELTA Systems ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்தது குறிப்பிடத்தக்கது.