பாகிஸ்தான் நாட்டின் உளவு அமைப்பான ISI உடைய முக்கியமான லால் மொஹம்மது என்பவன் மர்ம நபர்களால் பல முறை நேபாள தலைநகர் காத்மாண்டூவில் சுட்டு கொல்லப்பட்டுள்ளான்.
பாகிஸ்தானில் இருந்து வரும் கள்ள நோட்டுகளில் பெரும்பகுதியை இந்தியாவுக்குள் புழக்கத்தில் விடுவது தான் இவனுடைய பணி ஆகும், மேலும் முன்னர் தாவுத் இப்ராஹீம் குழுவில் உறுப்பினராகவும் இருந்துள்ளான்.
ஆரம்பகாலத்தில் கட்ட பஞ்சாயத்து கொலை என இருந்தவன் பின்னர் தாவுத் கும்பலில் இணைந்து தேச விரோத செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்தான், யுரேனியம் கடத்தல், தங்கம் கடத்துவது போன்ற பல சட்டவிரோத செயல்களை செவ்வனே செய்து வந்தான்.
பாகிஸ்தானிற்கு சென்றவன் அங்கிருந்து நேபாளம் சென்று தலைநகர் காத்மாண்டூவில் துணி வியாபாரம் செய்து வந்தான், கடந்த சில நாட்களாக தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் கொலை முயற்சி நடைபெற்றதாகவும் காவல்துறையிடம் பாதுகாப்பு கேட்டு விண்ணப்பம் செய்திருந்தான்.
இந்த நிலையில் கோத்தகார் பகுதிக்கு காரில் வந்திறங்கிய அவனை இருசக்கர வாகனத்தில் வந்த இரு மர்ம நபர்கள் விரட்டி விரட்டி துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி சென்றனர், படுகாயமடைந்த அவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
தாக்குதல் நடத்திய இருவரையும் பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நேரத்தில் சந்தேக பார்வை இந்தியாவின் அயலக உளவு அமைப்பான RAW மீது திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.