இந்திய கடற்படை தனது இரண்டு விமானந்தாங்கி போர் கப்பல்களில் இருந்து இயக்க 26 போர் விமானங்களுக்கான தேடலை நடத்தி வருகிறது.
ஏற்கனவே இந்திய விமானப்படையிடம் Rafale M உள்ளதாலும் பயிற்சி உள்ளிற்றவை எளிதாக கிடைக்கும் என்பதாலும் Rafale M போர் விமானம் எளிதாக இந்த தேர்வில் வெற்றி பெற்றிருக்கும் ஆனால் இந்திய விமானந்தாங்கி கப்பல்களில் இருந்து இயங்குவதில் உள்ள சிக்கல்கள் காரணமாக தேர்வாவது கஷ்டம் என கூறப்படுகிறது.
ஆனால் அதே நேரத்தில் இந்திய கடற்படை அமெரிக்காவின் Boeing FA-18 Super Hornet ரக விமானங்கள் இரண்டு போர் விமானந்தாங்கி கப்பல்களில் இருந்து எவ்வித பிரச்சினையும் இன்றி சிறப்பாக இயங்கும் அது பல்வேறு கட்ட சோதனைகளிலும் நிருபணமாகி உள்ளது.
இந்த நிலையில் அமெரிக்கா தயாரித்த Joint Strike Fighter F-35 C இரண்டு இந்திய விமானந்தாங்கி போர் கப்பல்களிலும் இயங்க கூடியதாகும், குறிப்பாக தற்போது பயன்பாட்டில் உள்ள Mig29K போர் விமானத்திற்கு அளவில் இணையானதாகும்.
இந்த ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானம் மீது இந்திய கடற்படை ஆர்வம் காட்டி ஒருவேளை அது தேர்வு செய்யப்பட்டு இருந்தால் அது இந்திய கடற்படைக்கு மிகப்பெரிய அளவில் வலு சேரத்திருக்கும் என்றால் மிகையல்ல.