
அஸர்பெய்ஜான் அர்மீனியா மீது படையெடுத்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் துருக்கி இந்த பிரச்சினையில் அஸர்பெய்ஜானுக்கு முழுமையான ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது.
தற்போது ஈரான் அர்மீனியாவுக்கு ஆதரவாக படைகளை தயார் நிலையில் வைத்துள்ளது அதாவது சுமார் 50,000 வீரர்களை அர்மீனிய அஸர்பெய்ஜான் உடனான எல்லைக்கு அனுப்பியுள்ளது.
முன்னரே அர்மீனியாவை ஈரான் ஆதரித்து வந்தாலும் தற்போது வெளிப்படையாக ராணுவத்தை தயார் நிலையில் வைக்கும் அளவுக்கு ஈரான் தீவிரமாக களம் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சில தகவல்கள் ஏற்கனவே ஈரான் தரைப்படையின் இரண்டு ரெஜிமென்ட் அளவிலான வீரர்கள் அர்மீனியா சென்று அஸர்பெய்ஜான் படைகளுடன் சண்டையிட்டு வருவதாகவும் பல அஸர்பெய்ஜான் வீரர்கள் கொல்லப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரானிய வெளியுறவு துறை அமைச்சர் நாசர் கனானி பேசும் போது அஸர்பெய்ஜான் மற்றும் அர்மீனியா இடையேயான எல்லையோரம் எந்த ஒரு மாற்றத்தையும் ஈரான் ஏற்று கொள்ளாது என தெரிவித்துள்ளார்.
மேலும் ஈரானிய தரைப்படையின் தளபதி ஜெனரல் மொஹம்மது பாக்போர் அர்மீனியா உடனான எல்லைக்கு சென்று அங்குள்ள ஈரானிய படைகளின் தயார் நிலையை ஆய்வு செய்து முழு அளவிலான போரை சந்திக்க தயாராக இருப்பதாக கூறினார்.