விபத்துக்குள்ளான மர்ம விமானத்தை விரட்டிய ஜெர்மன், டென்மார்க் மற்றும் ஸ்வீடன் விமானப்படைகள் !!
கடந்த செப்டம்பர் 4ஆம் தேதி ஸ்பெயின் நாட்டின் ஜெரேஸ் நகரில் இருந்து ஜெர்மனியின் கொலோன் நகரை நோக்கி புறப்பட்ட ஒரு தனி விமானம் ஒன்று புறப்பட்டது, புறப்பட்ட கொஞ்ச நேரத்திலேயே தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக விமானத்தில் இருந்து கட்டுபாட்டு அறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.
அதன்பின்னர் விமானத்திற்கும் கட்டுபாட்டு மையத்திற்கும் இடையேயான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது, அதன் பின்னர் விமானத்தின் பாதை மாறியதை லாத்வீயா நாட்டின் ரேடார்கள் கண்காணித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த Cessna551 ரக விமானம் Auto pilot முறையில் தானாகவே பறந்து பால்டிக் பிரதேசத்தை கடந்த ஸ்வீடன் அருகேயுள்ள காட்லாண்ட் தீவிற்கு அருகே எரிபொருள் தீர்ந்த நிலையில் கடலில் மோதி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.
இதையடுத்து லித்துவேனிய கடற்படை ரோந்து கலன்கள் மற்றும் லித்துவேனிய விமானப்படை ஹெலிகாப்டர்கள் ஆகியவை விபத்து பகுதியை நோக்கி விரைந்து சென்றன ஆனால் விமானத்தில் யாருமே இல்லை.
விமானத்தின் பாதை மாறியதுமே ஃபிரெஞ்சு, ஜெர்மானிய, லித்துவேனியா, நெதர்லாந்து, டென்மார்க் ஆகிய நாடுகளின் போர் விமானங்கள் விமானத்தை விரட்டி சென்றன, ஆனால் விமானத்தில் யாரும் இல்லை இது புதிராகவே உள்ளது.
விமானத்தின் மூன்று பாகங்கள் லித்துவேனிய கடலோர காவல்படையால் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இந்த விமானத்தின் உரிமையாளர் ஜெர்மன் நாட்டின் கார்ல் பீட்டர் கிரீஸ்மான் என்பவருக்கு சொந்தமான விமானம் என்பது தெரிய வந்துள்ளது.