மேலும் வலுவடையும் விக்ராந்த்; MF-STAR (AESA) ரேடார், LRSAM ஏவுகணைகள் விரைவில் இணைப்பு !!

  • Tamil Defense
  • September 20, 2022
  • Comments Off on மேலும் வலுவடையும் விக்ராந்த்; MF-STAR (AESA) ரேடார், LRSAM ஏவுகணைகள் விரைவில் இணைப்பு !!

சமீபத்தில் இந்திய கடற்படையில் INS VIKRANT (IAC – 1) விமானந்தாங்கி போர் கப்பல் இணைந்தது, அந்த நேரத்தில் சில முக்கியமான அமைப்புகள் மற்றும் ஆயுதங்கள் இன்றி தான் படையில் இணைக்கப்பட்டது, தற்போது அவற்றை பொருத்தும் பணிகள் துவங்க உள்ளன.

அந்த வகையில் முதல்கட்டமாக AESA – Active Electronically Scanned Array Radar எனும் ரகத்தை சேர்ந்த ரேடார் மற்றும் LRSAM – Long Range Surface to Air Missiles எனப்படும் தொலைதூர வானிலக்கு தாக்குதல் ஏவுகணைகளும் INS VIKRANT விமானந்தாங்கி போர் கப்பலில் பொருத்தப்பட உள்ளன.

மற்ற விமானந்தாங்கி போர் கப்பல்களை போல் CBG – Carrier Battle Group எனப்படும் தனது படையணியில் உள்ள பிற போர் கப்பல்கள் வான்வழி ஆபத்துகளில் இருந்து அளிக்கும் பாதுகாப்பை நம்பி இருக்காமல் தன்னை தானே பாதுகாத்து கொள்ளும் ஆற்றலை கொண்டது, அதற்கேற்றவாறு அதிகளவில் அதாவது தேவைக்கேற்ற அளவுக்கு வான் பாதுகாப்பு அமைப்புகளை சுமக்கும் என கூறப்படுகிறது.

வருகிற நவம்பர் மாதம் துவங்க உள்ள Aviation வானூர்தி ஆபரேஷன் சோதனைகளுக்கு முன்னர் CSL Cochin Shipyards Limited கொச்சி கப்பல் கட்டுமான நிறுவனம் விக்ராந்த் கப்பலில் இந்திய இஸ்ரேல் கூட்டு தயாரிப்பில் உருவான Barak-8 LRSAM எனப்படும் தொலைதூர வான் பாதுகாப்பு ஏவுகணைகளை இணைக்க உள்ளது, இது 500 மீட்டர் முதல் 100 கிலோமீட்டர் தொலைவு வரை பாயும், 20 கிலோமீட்டர் உயரத்தில் (Mach 2) மணிக்கு 2469 வேகத்தில் பறக்கும் என கூறப்படுகிறது.

AESA – Active Electronically Scanned Array ரகத்தை சேர்ந்த MF-STAR Multi Functional Surveillance, Tracking & Guidance Radar, இதனை IAI Israeli Aerospace Industries மற்றும் Elta Systems ஆகிய இஸ்ரேலிய நிறுவனங்கள் கூட்டாக தயாரித்துள்ளன, இது S band அதாவது 2 முதல் 4 GHz Giga Hertz ஜிகாஹெர்ட்ஸ் அளவிலான அலைவரிசைகளில் இயங்கும் திறன் கொண்டதாகும்.

இந்த ரேடார் வான் மற்றும் கடலபரப்பை ஒருசேர 300 முதல் 450 கிலோமீட்டர் தொலைவு வரையும், அதிக உயரத்தில் பறக்கும் விமானங்களை 250 கிலோமீட்டர் தொலைவில் இருந்தும், கடல்பரப்பை ஒட்டி வரும் ஏவுகணைகளை கப்பலில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவுக்கு முன்னதாகவே கண்காணிக்கும் ஆற்றல் கொண்டதாகும்,மேலும் இதன் Refresh Rate மிக அதிகமானதாகும்.

இந்த EL/M-2248 MF-STAR ரேடார் கண்காணிப்பு, இலக்கை அடையாளம் காணுதல் மற்றும் வழிகாட்டுவது போன்ற பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் என்பதும் இதன் 4 Array தலா ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையிலும் தெளிவாக கண்காணிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது, இது இந்தியாவின் கொல்கத்தா, விசாகப்பட்டினம் ரக நாசகாரிகள், நீலகிரி ஃப்ரிகேட்டுகள், இஸ்ரேலின் Sa’ar-5, Sa’ar -6 ரக கார்வெட்டுகள் மற்றும் தென்கொரியாவின் ROKS Marado சிறிய விமானந்தாங்கி கப்பல்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது கூடுதல் தகவல் ஆகும்.