இந்தியாவின் புதிய ஆளில்லா விமானம் அடுத்த ஆண்டு அறிமுகம் !!
1 min read

இந்தியாவின் புதிய ஆளில்லா விமானம் அடுத்த ஆண்டு அறிமுகம் !!

இந்தியாவின் Loyal Wingman திட்டத்தின்கீழ் CATS Warrior அதாவது Combat Air Teaming System எனப்படும் குழுவாக சண்டையிடும் ஆளில்லா போர் விமானங்களை நமது HAL – Hindustan Aeronautics Limited ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த திட்டத்தில் HAL உடன் இணைந்து Newspace Research & Technologies எனும் தனியார் துறை நிறுவனமும் இணைந்து செயலாற்றி வருகிறது அடுத்த ஆண்டு இந்த CATS அமைப்பின் Warrior ஆளில்லா சண்டை விமானம் அறிமுகப்படுத்தப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் Warrior விமானத்தின் Fabrication பணிகள் துவங்கும் எனவும் அடுத்த ஆண்டு இறுதியில் இதனுடைய அறிமுகம் நடைபெறும் எனவும் நம்பத்தகுந்த வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு இதன் மாதிரி வடிவம் காற்று சுரங்க சோதனைகளுக்கு (Wind Tunnel Tests) உட்படுத்தப்பட்ட போது வடிவமைப்பில் மாற்றம் தேவை என்பது தெரிய வந்து மாற்றங்கள் செய்யப்பட்டு மீண்டும் இந்த ஆண்டு ஆரம்பத்தில் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

2024ஆம் ஆண்டின் மத்தியில் இதனுடைய முதல் பறக்கும் சோதனைகள் நடைபெற உள்ளன, பல Warrior ஆளில்லா போர் விமானங்களை ஒரு போர் விமானத்தின் விமானி கட்டுபடுத்தி தரை மற்றும் வான் தாக்குதல் நடத்த முடியும் என்பது இதன் சிறப்பம்சம் ஆகும்.