Breaking News

இந்தியாவின் சுதேசி இலகுரக டாங்கி 2023ஆம் ஆண்டு அறிமுகம் !!

  • Tamil Defense
  • September 24, 2022
  • Comments Off on இந்தியாவின் சுதேசி இலகுரக டாங்கி 2023ஆம் ஆண்டு அறிமுகம் !!

DRDO Defence Research and Development Organisation அதாவது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் Larsen & Toubro (L & T) நிறுவனம் கூட்டாக இணைந்து 2023ஆம் ஆண்டு இந்தியாவின் சுதேசி இலகுரக டாங்கியை அறிமுகம் செய்ய உள்ளன.

Zorawar ஸோராவர் என அழைக்கப்படும் இந்த இலகுரக டாங்கி அடுத்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்படும், சமீபத்தில் தான் இதற்கான Acceptance of Necessity AoN எனப்படும் முதல்கட்ட அனுமதியை இந்திய பாதுகாப்பு அமைச்சகம் வழங்கியது.

லார்சன் அன்ட் டூப்ரோ L & T – Larsen and Toubro நிறுவனமானது வடிவமைப்பு கூட்டாளியாக இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது அதாவது DRDO வடிவமைக்கும் கூடவே லார்சன் அன்ட் டூப்ரோ நிறுவனமும் தனது அனுபவம் காரணமாக உதவும், இந்த நிறுவனம் ஏற்கனவே K9 Vajra வஜ்ரா, FICV போன்ற திட்டங்களில் ஈடுபட்ட அனுபவம் மிக்கது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஸோராவர் இலகுரக டாங்கிகள் அதிக உயர மலைபிரதேச பகுதிகளில் இயங்கும் திறன் கொண்டவையாக இருக்கும் இதற்கென சக்திவாய்ந்த பிரத்தியேக என்ஜின் என்று இவற்றில் இணைக்கப்படும் இந்த என்ஜின் டாங்கியின் எடைக்கு ஏற்ற அளவுக்கு சரியான விகிதத்தில் சக்தியை வழங்கும் ஆகவே மிகவும் வேகமாக செல்லும் திறனை கொண்டிருக்கும்.

மேலும் ஸோராவர் இலகுரக டாங்கிகள் ஏவுகணைகளை ஏவும் திறன், ஆளில்லா விமான எதிர்ப்பு திறன், தாக்குதல் எச்சரிக்கை அமைப்பு ஆகியவற்றை கொண்டிருக்கும். இந்திய தரைப்படைக்கு தற்போது 350 இலகுரக டாங்கிகள் தேவைப்படுகிறது ஆனால் சுமார் 700 ஸோராவர் இலகுரக டாங்கிகள் வரை வாங்கப்படலாம் என தரைப்படை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.