இந்தியாவின் மிகப்பெரிய இரும்பு தயாரிப்பு பொதுத்துறை நிறுவனமான SAIL Steel Authority of India Limited ன் ஒரு பிரிவான BSP Bhilai Steel Plant விக்ராந்த விமானந்தாங்கி கப்பலுக்கு தேவையான 249A, 249B ரக பிரத்தியேக இரும்பை தயாரித்தது.
தற்போது இந்த வகை இரும்பு ரகங்களை இந்தியா சொந்தமாக கட்டமைக்க உள்ள அணுசக்தி தாக்குதல் நீர்மூழ்கி கப்பல்களுக்கு பயன்படுத்தி கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது, அதன்படி இந்த வகை இரும்பு ரகங்களை கொண்டு தகடுகளை தயாரித்து சோதனைக்கு உட்படுத்த உள்ளனர்.
இந்த இரும்பு தகடுகளை பல்வேறு கட்ட சோதனைகளுக்கு உட்படுத்த உள்ளனர், பின்னர் கப்பலின் Hull எனப்படும் பாகங்களை போன்று சிறிய அளவில் வெல்டிங் மூலமாக உருவாக்கி பின்னர் அவற்றை லேசர் ஸ்கேனர்களை கொண்டு பரிசோதனை செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த சோதனைகளை மேற்பார்வையிட இந்திய கடற்படையின் குழு ஒன்றும் DRDO வின் ஒரு பிரிவான DMRL பாதுகாப்பு உலோகவியல் ஆராய்ச்சி ஆய்வகம் குழு ஒன்றும் சோதனை நடைபெறும் இடத்திற்கு செல்ல உள்ளனர் அங்கு அவர்கள் முன்னிலையில் சோதனைகள் நடத்தப்படும்.
அணுசக்தியால் இயங்கும் தாக்குதல் நீர்மூழ்கி கப்பல்கள் நீருக்கடியில் மற்ற நீர்மூழ்கிகளை விடவும் வேகமாக பயணிப்பவை ஆகும் மேலும் அதிக ஆழம் செல்ல வேண்டும் ஆகவே சப்தம் வெளிபடுத்த கூடாது மேலும் அதிக நீர் அழுத்தத்தையும் தாங்க வேண்டும் அதற்கு உயர்தர உலோகம் அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அணுசக்தி தாக்குதல் நீர்மூழ்கி கப்பல்களில் இந்தியா சுமார் 95% அளவுக்கு இந்திய தயாரிப்பு பாகங்கள் மற்றும் அமைப்புகளை இணைக்க விரும்புகிறது, மேலும் Pumpjet Propulsion, அதிக வெப்ப வாயு குளிர்விப்பு அணு உலைகள் ஆகியவை இவற்றில் இருக்கும்.
இந்தியா தனது கடற்படையில் உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரிக்கப்பட்ட சுமார் ஆறு அதிநவீன அணுசக்தியால் இயங்கும் திறன் கொண்ட தாக்குதல் நீர்மூழ்கி கப்பல்களை 2035ஆம் ஆண்டு வாக்கில் இருக்க வேண்டும் என திட்டமிட்டுள்ளது கூடுதல் தகவல் ஆகும்.