இந்தியா HALE High Altitude Long Endurance அதாவது அதிக உயரத்தில் நீண்ட நேரம் பறக்கும் ட்ரோன்களை உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரிக்கும் பணியை முடுக்கி விட்டுள்ளது பலருக்கும் தெரிந்தது தான்.
தற்போது இந்த திட்டத்தில் மிகவும் முக்கியமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது, அதாவது முதல்கட்ட வடிவமைப்பு முடிவு பெற்று இரண்டாவது காற்று சுரங்க சோதனை நிலையை எட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்காக ADA Aeronautical Development Agency எனப்படும் வானூர்தி மேம்பாட்டு முகமை IIT KANPUR கான்பூர் ஐஐடி கல்லூரியை திட்டத்தின் இந்த கட்டத்தை நிறைவேற்ற ஈடுபடுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
காற்று சுரங்க சோதனைகள் (Wind Tunnel Test) நிறைவடைந்த பிறகு மேம்பாட்டு சோதனைகளை நடத்த இரண்டு வடிவங்களை உருவாக்கவும் ADA விஞ்ஞானிகள் திட்டம் வகுத்துள்ளனர்.
இந்த HALE ரக ட்ரோன் ஒரு TurboProp என்ஜினை பின்னால் இருந்து தள்ளும் வகையில் கொண்டுள்ளது, இது சுமார் 4 டன் எடையுடன் இரட்டை வால்பகுதியுடன் Rustom-1 ஆளில்லா விமானத்தை விடவும் அளவில் பெரிதாக இருக்கும்,
இந்த Turboprop என்ஜின் பொருத்தப்பட்ட HALE ரக ஆளில்லா விமானத்திற்கு அடுத்தபடியாக TurboFan என்ஜின்களை கொண்ட சுமார் 50,000 அடி உயரத்திற்கு மேல் பறக்கும் திறன் கொண்ட ஆளில்லா விமானமும் தயாரிக்கப்படும் என்பது கூடுதல் தகவல் ஆகும்.