இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் பணியாற்றி வரும் மென்பொருள் பொறியாளர்கள் பலரை நல்ல வேலை வாய்ப்பு ஆஃபர் வழங்கி கவர்ந்து வரவைத்து மியான்மரில் சிறைவைத்துள்ளனர்.
அதாவது அவர்களுக்கு வேலை வழங்குவதாக கூறி தாய்லாந்து வரவைத்து அங்கிருந்து மியான்மர் தாய்லாந்து எல்லையோரம் உள்ள மியான்மர் நாட்டின் மேசாட் நகருக்கு அனுப்பு வைக்கின்றனர், இந்த பகுதிகள் முழுவதும் சீன கும்பல்களின் கட்டுபாட்டில் உள்ளதாக கூறப்படுகிறது.
அப்படி வரவைக்கப்படும் மென்பொருள் பொறியாளர்களை சம்பளம் இன்றி கொத்தடிமை முறையில் வேலை வாங்கி வருகின்றனர், அப்படி நூற்றுக்கணக்கான இந்தியர்கள் சிக்கியுள்ளனர்.
இதுவரை 32 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில் அங்கிருந்து தப்பி வந்த தில்லியை சேர்ந்த ஒருவர் கூறுகையில் 500 க்கும் மேற்பட்ட இந்திய மென்பொறியாளர்கள் சிக்கி உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்திய அரசு ஒரு பக்கம் குற்றவாளிகளை தாய்லாந்து மற்றும் மியான்மர் அரசுகளுடன் இணைந்து அடையாளம் கண்டு வருவதாகவும் அதே நேரத்தில் பாதிக்கப்பட்டோரை மீட்பதிலும் கவனம் செலுத்தி வருவதாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளது.