இஸ்ரேலிய பாதுகாப்பு கருவியை பெறும் இந்திய விமானப்படையின் சுகோய் விமானங்கள் !!

இந்திய விமானப்படையின் சுகோய்-30 Su-30 MKI ரக பல திறன் கனரக போர் விமானங்களில் இஸ்ரேலிய நிறுவனமான Rafael Advanced Systems Limited நிறுவனம் தயாரிக்கும் X-Guard Fibre Optic Supersonic Towed Decoy அமைப்பு பொருத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த Decoy அமைப்புகள் என்பவை போர் விமானத்தை தாக்க வரும் ஏவுகணைகளை குழப்பி ஏமாற்றி விமானத்தில் இருந்து திசைதிருப்பிவிடும் சில நேரங்களில் கடைசி கட்டடமாக தங்களை நோக்கி ஈர்த்து தங்கள் மீது ஏவுகணைகளை மோத செய்து விமானத்தை காப்பாற்றும் அமைப்புகள் ஆகும்.

இந்த அமைப்புகள் ரேடாரால் வழிகாட்டப்படும் ஏவுகணைகளை ஏமாற்ற பயன்படுத்தப்படுகிறது, வழக்கமான மின்னனு போரியல் அமைப்புகளால் இத்தகைய Monopulse மற்றும் LORO ரேடார்கள் பொருத்தப்பட்ட ஏவுகணைகளை தடுக்க முடியாது.

இத்தகைய அமைப்புகள் விமானத்தால் வானில் இழுத்து செல்லப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது, இது மாக் 1.6 அதாவது மணிக்கு 1975 கிலோமீட்டர் வேகத்திலும், 9G அழுத்ததையும் தாக்குபிடித்து விமானத்தடனேயே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இதே X – Guard Fibre Optic Towed Decoy அமைப்புகள் நமது ரஃபேல் Dassault Rafale போர் விமானங்களில் பயன்படுத்தி வரப்படுவது கூடுதல் தகவல் ஆகும்.