காஷ்மீரில் அடுத்தடுத்து என்கவுன்டர் 4 பயங்கரவாதிகளை போட்டு தள்ளிய பாதுகாப்பு படையினர் !!
1 min read

காஷ்மீரில் அடுத்தடுத்து என்கவுன்டர் 4 பயங்கரவாதிகளை போட்டு தள்ளிய பாதுகாப்பு படையினர் !!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஷோபியான் மாவட்டத்தில் உள்ள பஸ்குச்சான் பகுதியில் இன்று பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாதிகள் இடையே மோதல் ஏற்பட்டு துப்பாக்கி சண்டை நடைபெற்றது.

இது பற்றி காஷ்மீர் பிராந்திய காவல்துறை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இது பற்றி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் ஷோபியான் பகுதியில் உள்ள பஸ்குச்சான் கிராமத்தில் என்கவுன்டர் நடைபெற்று வருவதாக பதிவிட்டுள்ளது.

அதே போல கடந்த வாரம் ஷோபியான் அருகே நக்பால் கிராமத்தில் நடைபெற்ற என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில் அவர்கள் இருவரும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் உறுப்பினர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

மேலும் சமீபத்தில் அதாவது செப்டம்பர் 1ஆம் தேதி பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள சோபோர் பகுதியில் நடைபெற்ற என்கவுன்டரில் இரவோடு இரவாக இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர், இருவரும் ஜெய்ஷ் இ மொஹம்மது அமைப்பின் உறுப்பினர்கள் ஆவர்.

சோபோர் அருகேயுள்ள போமாய் கிராமத்தில் இருவரும் பதுக்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து சுற்றி வளைத்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டதில் கொல்லப்பட்டனர், இருவரும் சேர்ந்து பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டது குறிப்பிடத்தக்கது.