கடலில் இறக்கப்பட்ட INS TARAGIRI சுதேசி போர் கப்பல் !!

  • Tamil Defense
  • September 12, 2022
  • Comments Off on கடலில் இறக்கப்பட்ட INS TARAGIRI சுதேசி போர் கப்பல் !!

நேற்று மும்பையில் உள்ள MDL Mazagon Docks Limited மஸகான் கப்பல் கட்டுமான தளத்தில் நடைபெற்ற விழாவில் INS TARAGIRI எனும் Project 17 Alpha (P17-A) ரக ஃப்ரிகேட் போர் கப்பல் கடலில் இறக்கப்பட்டது.

நீலகிரி வகுப்பை சேர்ந்த இந்த கப்பல்களை மும்பை மஸகான் கப்பல் கட்டுமான தளம் மற்றும் கொல்கத்தாவில் அமைந்துள்ள GRSE Garden Reach Shipbuilders & Engineers கார்டன் ரீச் கப்பல் கட்டுமான பொறியியல் நிறுவனம் ஆகியவை இணைந்து கட்டமைத்து வருகின்றன.

6670 டன்கள் எடை கொண்ட இந்த வகை போர் கப்பல்கள், 149 மீட்டர் நீளமும் 17.8 மீட்டர் நீளமும் கொண்டவையாகும், இரண்டு Gas Turbine மற்றும் இரண்டு டீசல் என்ஜின்களை கொண்டவை ஆகும்,மேலும் 28 நாட்டிகல் மைல் அதாவது மணிக்கு 51 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியவை ஆகும்.

இந்த Project 17 Alpha P17-A அதாவது 75 ஆல்ஃபா திட்டத்தில் மொத்தமாக நீலகிரி, உதய்கிரி, தாராகிரி, ஹிம்கிரி, துனாகிரி ஆகியவையும் ஒரு பெயரிடப்படாத கப்பல் என ஆறு கப்பல்கள் உள்ளன குறிப்பிடத்தக்கது.