முப்படைகளுக்கு சிறப்பு கொள்முதல் அதிகாரம், மகிழ்ச்சியில் இந்திய நிறுவனங்கள் !!

இந்திய பாதுகாப்பு அமைச்சகம் முப்படைகளுக்கும் ஆண்டுக்கு தலா 300 கோடி ரூபாய் அளவில் அவசரகால கொள்முதல் செய்து கொள்ள அதிகாரம் அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆயுத அமைப்புகளை வாங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது இதன் காரணமாக தங்களுக்கு ஆர்டர்கள் கிடைக்கும் என்பதால் இந்திய நிறுவனங்கள் மிகழ்ச்சியில் ஆழ்ந்துள்ளன.

ஆனால் ஆர்டரை பெறும் நிறுவனங்கள் ஒப்பந்தம் கையெழுத்தானதில் இருந்து ஒரு வருட காலகட்டத்திற்குள் டெலிவரியை செய்து முடிக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியமான நிபந்தனையாகும்.

தற்போது குழுவான இயங்கும் ஆளில்லா விமான அமைப்புகள் (Swarm Drone), தொலைதூர ராக்கெட்டுகள், அடுத்த தலைமுறை கண்ணிவெடிகள், ஆளில்லா விமானங்கள், AI அதாவது செயற்கை அறிவாற்றல் கொண்ட அமைப்புகள் ஆகியவை இந்த பட்டியலில் உள்ளடங்கும்.

EEL எனப்படும் இந்திய நிறுவனம் தொலைவு நீட்டிக்கப்பட்ட பினாகா ராக்கெட்டுகள், விலை மலிவான புதிய 250 கிலோமீட்டர் தொலைவு செல்லும் முழுவதும் இந்தியாவில் தயாரிக்கப்படும் வான் பாதுகாப்பு ஏவுகணை, ஆளில்லா விமானங்கள்,

ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகள், கண்ணிவெடிகளை கண்டறிந்து செயலிழக்க செய்யும் ட்ரோன்கள், டாங்கி எதிர்ப்பு அமைப்புகள், தொலைதூர தாக்குதல் ராக்கெட்டுகள் ஆகியவற்றை தயாரித்து வழங்க முன்வந்துள்ளது.

உள்நாட்டிலேயே பல்வேறு அதிநவீன ஆயுத அமைப்புகள் மற்றும் தளவாடங்கள் கிடைப்பதை அடுத்து தான் பாதுகாப்பு அமைச்சகம் பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்கு பிறகு இறக்குமதி செய்ய தடை விதித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.