புதிய சுதேசி குறுந்தூர பலிஸ்டிக் ஏவுகணையை தயாரிக்கும் இந்திய நிறுவனம் !!

மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் நகரை தளமாக கொண்டு இயங்கும் Economic Explosives Limited (EEL) எனப்படும் இந்திய தனியார் துறை நிறுவனமானது புதிய ஏவுகணை ஒன்றை தயாரிக்க முன்வந்துள்ளது.

இந்திய தரைப்படை உடன் தற்போது EEL நிறுவனம் இதுபற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது, 250 கிலோமீட்டர் தொலைவு செல்லக்கூடிய குறுந்தூர பலிஸ்டிக் ஏவுகணையாக இது இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த வகை குறுந்தூர பலிஸ்டிக் ஏவுகணைகளை எதிரிகளுடைய MBRL பலகுழல் ராக்கெட் லாஞ்சர்கள், பிரங்கிகள், குறுந்தூர பலிஸ்டிக் ஏவுகணைகளை அழிக்க கச்சிதமாக துல்லியமாக பயன்படுத்தி கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏற்கனவே Pinaka பினாகா ராக்கெட்டுகளை தயாரித்து வரும் இந்த நிறுவனம் தற்போது 150 கிலோமீட்டர் பாயக்கூடிய, நவீன வழிகாட்டி அமைப்பு, ஏவி விட்டு உடனடியாக நகரும் திறன்களை கொண்ட புதிய பினாகா ராக்கெட் அமைப்பை தயாரிக்க விருப்பம் தெரிவித்துள்ளது.

இந்த புதிய குறுந்தூர பலிஸ்டிக் ஏவுகணை மற்றும் புதிய அதிநவீன பினாகா பலிஸ்டிக் ஏவுகணை திட்டங்கள் பரிசீலனையில் தான் உள்ளன ஆனால் சீனாவின் ஆயுதங்களுக்கு பதிலடி கொடுக்க இது போன்ற ஆயுத அமைப்புகள் நமது படைகளுக்கு இன்றியமையாத தேவை ஆகும்.