இந்தியாவின் முதலாவது மற்றும் முன்னனி ட்ரோன் ஆளில்லா விமான தயாரிப்பு நிறுவனமான ideaForge Technology Pvt. Ltd அமெரிக்க ஆயுத சநாதையில் கால் பதிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.
அதாவது வட அமெரிக்க கண்டத்தின் மிக முக்கியமான ஆளில்லா விமான அமைப்புகள் கண்காட்சியான Commercial UAV கண்காட்சியில் தனது அதிக உயரத்தில் பறக்கக்கூடிய SWITCH ஆளில்லா விமானத்துடன் கலந்து கொள்ள உள்ளது.
வருகிற செப்டம்பர் 6 முதல் 8 வரையிலான மூன்று நாட்களில் நடைபெறும் இந்த கண்காட்சியில் கலந்து கொள்வதன் மூலமாக வட அமெரிக்க குறிப்பாக அமெரிக்க சந்தையில் வெற்றிகரமாக கால்பதிக்க முடியும் என ideaForge எண்ணுகிறது.
வட அமெரிக்காவின் காவல்துறை போன்ற சிவிலியன் அமைப்புகள் தேடுதல் மற்றும் மீட்பு பணிகளுக்கு பயன்படுத்தி கொள்ள முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது, செங்குத்தாக மேலேழும்பி தரை இறங்கவும் விமானம் போலவும் பறக்கவும் கூடிய இது எந்த காலநிலையிலும் இயங்கும் என்பது இதன் சிறப்பாகும்.
கடந்த ஆண்டு ideaForge நிறுவனம் SWITCH 1.0 ரக ஆளில்லா விமானங்களை சப்ளை செய்ய 20 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆர்டரை இந்திய தரைப்படையிடம் இருந்து பெற்றது இந்த ஆர்டர் நிறைவு பெற்ற நிலையில் சீன எல்லையில் களமிறக்க கூடுதல் ட்ரோன்களை இந்திய தரைப்படை ஆர்டர் செய்துள்ளது கூடுதல் தகவல் ஆகும்.