புதிய HALE ரக ஆளில்லா விமானத்தை தயாரிக்க முன்வந்த அதானி குழுமம் !!

அதானி குழுமத்தின் ஒரு பிரிவான Adani Defence அதானி டிஃபன்ஸ் இஸ்ரேலின் Elbit Systems எல்பிட் சிஸ்டம்ஸ் நிறுவனத்தோடு இணைந்து ஒரு புதிய HALE High Altitude Long Endurance ரக ஆளில்லா விமானத்தை தயாரிக்க முன்வந்துள்ளது.

HALE அதாவது அதிக உயரத்தில் நீண்ட நேரம் தொடர்ந்து பறக்கும் திறன் கொண்ட ஆளில்லா விமானம் ஆகும், அமெரிக்க MQ9 Predator ட்ரோன்களின் அதிக விலை காரணமாக இந்த திட்டம் இந்திய அரசின் தீவிர பரிசீலனையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவிடம் இருந்து முப்பது MQ-9B Predator HALE High Altitude Long Endurance அதாவது அதிக உயரத்தில் அதிக நேரம் பறக்கும் ட்ரோன்களை தலா ஒரு ட்ரோனுக்கு சுமார் 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் எனும் மதிப்பீட்டின் அடிப்படையில் வாங்க இந்தியா திட்டமிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.