அமெரிக்க தரைப்படை தன்னிடம் உள்ள நூற்றுக்கணக்கான Boeing CH-47 Chinook சினூக் கனரக ஹெலிகாப்டர்களை என்ஜினில் ஏதோ கோளாறு காரணமாக தீவிபத்து ஏற்படுவதாக கூறி பறக்க தடை விதித்து தரையில் நிறுத்தி வைத்தது.
இந்த நிலையில் இது பற்றிய உயர் மட்ட விசாரணைக்கு அமெரிக்க தரைப்படை உத்தரவிட்டு விசாரணை நடத்தப்பட்டதில் என்ஜினில் எரிபொருள் கசிவு ஏற்பட்டு அதன் காரணமாகவே தீவிபத்து ஏற்படுவதாக கண்டறியப்பட்டது.
இந்த நிலையில் இந்திய விமானப்படையும் 15 Boeing CH-47F Chinook சினூக் கனரக ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி வரும் நிலையில் இந்த விவகாரம் குறித்து கவலை தெரிவித்து இருந்தது, ஆகவே அமெரிக்காவிடம் இதுபற்றி முறையான விளக்கம் கேட்டுள்ளது.
இப்படி அமெரிக்க தரைப்படை சினூக் ஹெலிகாப்டர்களில் கோளாறுகள் தென்ப்பட்ட போதிலும் இந்திய விமானப்படையின் சினூக் ஹெலிகாப்டர்களில் பிரச்சினை ஏதும் இதுவரை வராத நிலையில் அவை தொடர்ந்து செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.