லடாக்கில் விமானப்படை அபாச்சி ஹெலிகாப்டரில் பறந்து ஆய்வு செய்த தரைப்படை தளபதி !!

  • Tamil Defense
  • September 12, 2022
  • Comments Off on லடாக்கில் விமானப்படை அபாச்சி ஹெலிகாப்டரில் பறந்து ஆய்வு செய்த தரைப்படை தளபதி !!

இந்திய தரைப்படையின் தலைமை தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே லடாக்கில் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டார் அப்போது அவர் விமானப்படையின் அபாச்சி ஹெலிகாப்டரில் பறந்து ஆய்வு மேற்கொண்டார் தொடர்ந்து விமானப்படை அதிகாரிகள் Boeing AH64D அபாச்சி தாக்குதல் ஹெலிகாப்டரின் திறன்களை குறித்து விலாவாரியாக எடுத்துரைத்தனர்.

கோக்ரா – ஹாட்ஸ்ப்ரிங்ஸ் செக்டாரில் இந்திய சீன ராணுவத்தினர் படைவிலக்க நடவடிக்கைகள் துவங்கி இரண்டு நாட்கள் ஆன நிலையில் ஜெனரல் மனோஜ் பாண்டே கிழக்கு லடாக்கில் பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆய்வு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Fire & Fury (14) கோர் தலைமையகத்திற்கு சென்ற தளபதிக்கு 14 கோர் கட்டளை அதிகாரி லெஃப்டினன்ட் ஜெனரல் அநிந்தியா செங்குப்தா உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் லடாக் கள நிலவரம் குறித்து தெளிவான விளக்கம் அளித்தனர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.