இந்திய தரைப்படையின் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே நேபாளத்திற்கு 5 முதல் 8 வரையிலான நான்கு நாட்கள் அலுவல் ரீதியான பயணம் சென்றுள்ளார்.
அங்கு அவருக்கு அனைத்து இந்திய தரைப்படை தளபதிகளுக்கும் கொடுக்கப்ட்ட படியே நேபாள தரைப்படையின் கவுரவ தளபதி அந்தஸ்து வழங்கப்பட்டது, இதை போல நேபாள தளபதிகளுக்கும் இந்திய தரைப்படையின் கவுரவ தளபதி அந்தஸ்து வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
நேபாள நாட்டின் ஜனாதிபதி இல்லமான ஷீத்தல் நிவாஸ் இல்லத்தில் வைத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்நாட்டு ஜனாதிபதி திருமதி. பித்யா தேவி பன்டாரி அவர்கள் ஜெனரல் மனோஜ் பாண்டே அவர்களுக்கு இந்த அந்தஸ்தை வழங்கி கவுரவித்தார்.
பின்னர் அவர் நேபாள ராணுவ தளபதி ஜெனரல் பிரபு ராம் ஷர்மாவை தலைநகர் காத்மாண்டூவில் உள்ள தரைப்படை தலைமையகத்தில் சந்தித்து இருதரப்பு ராணுவ உறவுகளை வலுப்படுத்துவது பேசினார்.
அதன்பிறகு பிர் சமாரக் நினைவகத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய அவர் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டு பிரங்கிகள், கவச வாகனங்கள், மருத்துவ பொருட்கள், குதிரைகள் போன்றவற்றை பரிசாக அளித்தார்.
இந்த சுற்றுபயணத்தின் போது இந்திய நேபாள உறவில் மிக முக்கியமானதாக கருதப்படும் நேபாள கோர்க்காக்களை அக்னிபாத் திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு முகாம்கள் நடத்தி சேர்ப்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.