பிரிட்டிஷ் காலனி காலகட்ட அடையாளங்களை ஒழிக்க இந்திய தரைப்படை முடிவு !!

சமீபத்தில் இந்திய கடற்படை தனது கொடியில் இருந்த St George’s Cross எனும் சிகப்பு சிலுவையை அகற்றி இந்தியாவின் கடல்சார் பாரம்பரியத்தை குறிக்கும் சின்னத்தை கொடியில் இணைத்தது.

இதனை தொடர்ந்து தற்போது இந்திய தரைப்படையும் தனது பிரிட்டிஷ் காலனி ஆட்சி காலகட்ட அடையாளங்கள் பாரம்பரியங்களை ஒழிக்க முடிவு செய்து சுற்றறிக்கை ஒன்றினை அனுப்பியுள்ளது.

அதில் கட்டிடங்களில் பிரட்டிஷ் ஆட்சியாளர்கள் பெயர், படையணிகளின் ஆங்கில பெயர்கள், பாரம்பரியங்கள், செயல்பாடுகள், சட்ட விதிமுறைகள், பிரிட்டிஷ் ஆட்சி கால மரியாதைகள் போன்றவற்றை அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.