மத்திய அரசு கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் ராணுவ தளவாட ஏற்றுமதி சுமார் 334 சதவிகித அளவுக்கு உயர்வை கண்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.
மத்திய அரசின் ஊடக தொடர்பு பிரிவான PIB – Press Information Bureau இதுபற்றிய தகவலை தனது ட்விட்டர் கணக்கில் வெளியிட்டுள்ளது மேலும் சுமார் 75 நாடுகளுக்கு இந்தியா ஆயுதம் ஏற்றுமதி செய்வதாகவும் கூறியுள்ளது.
பாதுகாப்பு துறை செயலாளர் அஜய்குமார் அவர்கள் ஊடகவியலாளர்களிடம் சமீபத்தில் பேசும்போது இந்தியா நீண்ட காலமாக உலகின் மிகப்பெரிய ஆயுத இறக்குமதி நாடாக இருந்து வருகிறது அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா உலகின் மிக முக்கியமான ஆயுத ஏற்றுமதியாளராக உருமாற்றம் அடையும் என தெரிவித்தார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா பல்வேறு உள்நாட்டு தயாரிப்பு தளவாடங்களை படையில் இணைத்துள்ளது குறிப்பிடத்தக்கது INS VIKRANT, DHRUV ALH MK3, TEJAS MK1 , VIshakapatnam Desteoyers போன்றவை அதில் முக்கியமானவை ஆகும்.