இந்திய தரைப்படை மற்றும் சீன தரைப்படையை சேரந்த மேஜர் ஜெனரல் அந்தஸ்திலான மூத்த அதிகாரிகள் கடந்த புதன்கிழமை அன்று சந்தித்து இருதரப்பு டிவிஷன் கமாண்டர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடத்தினர்.
பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்களின்படி இது இந்தியா சீனா இடையேயான எல்லை கட்டுபாட்டு கோடு பகுதியில் பதட்டங்களை தணிக்கவும் அமைதியை நிலைநாட்டவும் வழக்கமாக மேற்கள்ளப்படும் இருதரப்பு சந்திப்பு மற்றும் பேச்சுவார்த்தை தான் என கூறப்படுகிறது.
இந்த பேச்சுவார்த்தையின் போது DBO – Daulat Beg Oldi அதாவது தவ்லத் பெக் ஒல்டி செக்டார் மற்றும் பல இதர செக்டார்களில் அமைதியை ஏற்படுத்த சீனா ஒத்துழைக்க வேண்டும் என இந்திய தரப்பு வலியுறுத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மாதம் லடாக்கின் சூஷூல் செக்டாரில் நடைபெற்ற சந்திப்பின் போது சீன விமானப்படையின் அத்துமீறல்களுக்கு இந்திய விமானப்படை அதிகாரி கடுமையான கண்டனத்தை பதிவு செய்ததும் பதிலுக்கு போர் விமானங்களை அனுப்பியதும் குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் ஆகும்.