MRFA திட்டம் செயல்பாட்டுக்கு வரும் முன் இந்திய படையில் 3 சுதேசி போர் விமானங்கள் இணையும் !!

  • Tamil Defense
  • September 15, 2022
  • Comments Off on MRFA திட்டம் செயல்பாட்டுக்கு வரும் முன் இந்திய படையில் 3 சுதேசி போர் விமானங்கள் இணையும் !!

இந்திய விமானப்படை MRFA – Multi Role Fighter Aircraft திட்டத்தின் கீழ் சுமார் 114 பல திறன் போர் விமானங்களை வாங்க விரும்பி அறிவிக்கை வெளியிட்டது ஆனால் RFP Request For Proposal வெளியிடும் இரண்டாம் கட்டத்தை நோக்கி நகராமல் திட்டம் முடங்கியுள்ளது.

இந்திய விமானப்படை தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது இப்படி காலதாமதம் ஆகும் நிலையில் MRFA ஒப்பந்தம் கையெழுத்தாகும் முன்னரே மூன்று வெவ்வேறு விதமான சுதேசி போர் விமானங்கள் இந்திய படையில் இணையும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

எனினும் MRFA திட்டத்தை கைவிட இந்திய விமானப்படை விரும்பவில்லை, TEDBF, TEJAS MK2 ஆகிய இரண்டு 4.5ஆம் தலைமுறை போர் விமானங்களும், AMCA MK1 5ஆம் தலைமுறை போர் விமானமும் தான் படையில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த 5 அல்லது 6 ஆண்டுகளில் இவற்றின் சோதனைகள் துவங்கும் நிலையில் இந்திய விமானப்படை தேஜாஸ் மார்க்-2 மற்றும் ஆம்கா மார்க்-1 ஆகியவற்றில் அதிக விமானங்களை வாங்க உறுதி அளித்தால் வருடத்திற்கு சுமார் 30 விமானங்கள் வரை தயாரித்து தர முடியும் என HAL உறுதி அளித்துள்ளது.

தற்போது இந்திய விமானப்படை ஆறு படையணிகள் தேஜாஸ் மார்க்-2 மற்றும் ஏழு படையணிகள் ஆம்கா மார்க்-1 போர் விமானங்களை படையில் இணைக்க திட்டமிட்டு உள்ளதும், 45 TEDBF போர் விமானங்களை இந்திய கடற்படை வாங்க திட்டமிட்டு உள்ளதும் குறிப்பிடத்தக்கது.