சமீபத்தில் பாகிஸ்தான் விமானப்படையில் உள்ள அமெரிக்க தயாரிப்பு F-16 போர் விமானங்களுக்கான பராமரிப்பு உதவிக்கு அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்தது.
சுமார் 450 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான இந்த உதவிகள் மூலமாக பாகிஸ்தான் விமானப்படை தனது F-16 ரக போர் விமானங்களை மேம்படுத்தி ஆயுட்காலத்தை நீட்டித்து மேலும் அதிக நாட்கள் பயன்படுத்தி கொள்ள முடியும்.
இதுகுறித்து இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சரான லாய்டு ஆஸ்டின் உடன் தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தி தனது கவலையை தெரிவித்துள்ளதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார், விரைவில் இருவரும் நேரில் சந்தித்து பேச உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2018ஆம் ஆண்டு அமெரிக்க அதிபராக ட்ரம்ப் இருந்த காலகட்டத்தில் பாகிஸ்தானுக்கு உள்ள பயங்கரவாத தொடர்புகள் காரணமாக இந்த F-16 பராமரிப்பு வர்த்தக உதவி திட்டத்திற்கு அனுமதி அளிக்காமல் கிடப்பில் போட்டது குறிப்பிடத்தக்கது.