ரஷ்யாவின் Tu-160 தொலைதூர சூப்பர்சானிக் குண்டுவீச்சு விமானத்தை வாங்க போவதில்லை இந்தியா !!

சமீபத்தில் தில்லியில் உள்ள USI மையத்தில் நடைபெற்ற மேஜர் சமீர் சின்ஹா கருத்தரங்கில் இந்திய விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் விவேக் ராம் சவுதிரி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது ரஷ்ய தயாரிப்பான Tu-160 தொலைதூர சூப்பர்சானிக் குண்டுவீச்சு போர் விமானங்களில் ஆறு விமானங்களை வாங்க போவதாக வெளியான தகவல் பற்றிய கேள்விக்கு வாங்குவதில் இந்திய விமானப்படைக்கு ஆர்வமில்லை என தெரிவித்தார்,

இந்தியாவுக்கு இத்தகைய தொலைதூர குண்டுவீச்சு போர் விமானம் இந்தியாவுக்கு தேவை இல்லை மாறாக மற்ற தொலைதூர தாக்குதல் ஏவுகணைகள் போன்ற ஆயுதங்களே சிறப்பானவை என கூறினார்.

மேலும் Tu-160 தொலைதூர குண்டுவீச்சு போர் விமானத்தில் தற்காப்பு அமைப்புகள் எதுவும் இல்லை ஆகவே அவற்றை பாதுகாக்க மிகப்பெரிய அளவில் போர் விமானங்களை அனுப்ப வேண்டும் இதற்கு அதிக செலவும் பிடிக்கும் அதற்கான நிதி ஆதாரமும் நம்மிடம் இல்லை எனவும் தெரிவித்தார்.