தேஜாஸ் விமான விற்பனை ; அர்ஜென்டினா சென்றுள்ள HAL குழுவினர் !!

  • Tamil Defense
  • September 5, 2022
  • Comments Off on தேஜாஸ் விமான விற்பனை ; அர்ஜென்டினா சென்றுள்ள HAL குழுவினர் !!

அர்ஜென்டினா சென்றுள்ள HAL குழுவினர் அர்ஜென்டினாவுக்கான இந்திய தூதர் தினேஷ் பாட்டியா தலைமையில் அர்ஜென்டினா விமானப்படை தளபதி ப்ரிகேடியர் ஜெனரல் சேவியர் ஐசக் மற்றும் அர்ஜென்டினா தரைப்படை தளபதி ஜெனரல் கில்லெர்மோ பெரெடா ஆகியோரை சந்தித்து பேசினர்.

அப்போது அவர்கள் இருதரப்பு உறவுகள், ராணுவ ஒத்துழைப்பு மற்றும் கூட்டு பயிற்சிகளை மேற்கொள்வது பற்றி பேசினர் மட்டுமின்றி இலகுரக தேஜாஸ் போர் விமானத்தை ஏற்றுமதி செய்வது பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த இலகுரக தேஜாஸ் மார்க்-1 போர் விமானத்தை பற்றி அர்ஜென்டினா விமானப்படையின் மூத்த அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர்.

மேலும் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவன குழுவினர் அர்ஜென்டினா அதிகாரிகளை இந்தியா வந்த இலகுரக தொழிற்சாலை மற்றும் தேஜாஸ் விமானத்தை பார்வையிட்டு செல்ல அழைப்பு விடுத்தனர்.

ஆகவே அடுத்த ஆண்டு நடைபெற உள்ள AERO INDIA ஏரோ இந்தியா 2023 வானூர்தி கண்காட்சியில் அர்ஜென்டினா விமானப்படை போர் விமானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் குழுவினர் வந்து தேஜாஸ் விமானத்தின் திறன்களை பரிசோதனை செய்ய உள்ளனர்.

இதே போல இந்த ஆண்டு ஆரம்பத்தில் அர்ஜென்டினா குழுவினர் சீனாவின் செங்டூ நகரத்திற்கு சென்று அங்கு அமைந்துள்ள JF-17 போர் விமானத்தை தயாரிக்கும் CATIC நிறுவனத்தை பார்வையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.