ராணுவ கவச வாகனங்களை வேற லெவலுக்கு மேம்படுத்த உள்ள இந்தியா!!

இந்திய தரைப்படையின் இயந்திரமயமாக்கப்பட்ட ரெஜிமென்டுகளான MECHANISED INFANTRY மற்றும் BRIGADE OF GUARDS ஆகியவை கவச வாகனங்களை பயன்படுத்தி வருபவை ஆகும்.

தற்போது இந்த வாகனங்களை நவீனமயமாக்கும் திட்டத்தை இந்திய தரைப்படை துவங்க உள்ளதாக அதாவது மிதவை குண்டுகள், ஏவுகணைகள், ஆளில்லா விமான எதிர்ப்பு அமைப்புகள், உளவு மற்றும் கண்காணிப்பு வசதிகளை இவற்றில் ஏற்படுத்துவது மட்டுமின்றி

DRDO TATA KESTREL பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்படுத்தபாட்டு நிறுவனம் மற்றும் டாடா குழுமம் இணைந்து தயாரித்த கெஸ்ட்ரெல் போன்ற அதிநவீன சுதேசி கவச வாகனங்கள்

மேலும் Larsen & Toubro லார்சன் அன்டு டூப்ரோ குழமம் மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் இணைந்து தயாரிக்கும் சுமார் 480 FICV – Future Infantry Combat Vehicle அதாவது எதிர்கால காலாட்படை சண்டை வாகனம் ஆகியவற்றையும் இந்திய தரைப்படை படையில் இணைக்க விரும்புகிறது.

மேலும் சோவியத் ஒன்றிய காலகட்ட BMP-2 கவச வாகனங்களில் இரவில் பார்க்கும் வசதி, இலக்கின் தொலைவு அறியும் லேசர் கருவி, தாக்குதல் கட்டுபாட்டு அமைப்பு, தானியங்கி இலக்கு அடையாளம் காணும் கருவி மற்றும் அதிநவீன ஆயுத அமைப்புகள் ஆகியவற்றை இணைத்து மேம்படுத்த உள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.