ரஷ்யாவில் பன்னாட்டு ராணுவ பயிற்சியில் கலந்து கொள்ளும் இந்தியா; அமெரிக்கா வருத்தம் !!

ரஷ்யாவில் செப்டம்பர் 1 முதல் 7 வரையிலான நாட்களில் ரஷ்யா இந்தியா சீனா லாவோஸ் நிகாரகுவா மங்கோலியா சிரியா உள்ளிட்ட பல நாடுகளின் படைகள் பங்கேற்கும் VOSTOK 2022 எனும் பிரமாண்ட ராணுவ பயிற்சிகள் நடைபெற்று வருகின்றன, இதில் இந்தியா பங்கேற்பது குறித்து அமெரிக்கா வருத்தம் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் கிழக்கு பகுதியிலும், ஒகோட்ஸ்க் மற்றும் ஜப்பானிய கடலிலும் நடைபெற உள்ள இந்த பயிற்சிகளில் 50,000 வீரர்கள், 140 விமானங்கள், 60 கடற்படை கலன்கள் ஆகியவை பங்கு பெற உள்ளதாகவும் இந்த பயிற்சிகள் வெவ்வேறு பகுதிகளில் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது.

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் இதுபற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில் ராணுவ தயார்நிலை, ஒருங்கிணைந்த செயல்பாடு, கடல் நிலம் வான் படைகளின் செயல்பாடு, எதிரி தாக்குதல்களை முறியடிப்பது போன்ற திறன்களை சோதிக்கும் வகையில் இப்பயிற்சிகள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.