உலகிலேயே முதல் முறையாக இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ள ஸ்வீடன் ஆயுதம், ஒப்பந்தம் இறுதி !!
1 min read

உலகிலேயே முதல் முறையாக இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ள ஸ்வீடன் ஆயுதம், ஒப்பந்தம் இறுதி !!

ஸ்வீடன் நாட்டை சேர்ந்த SAAB சாப் நிறுவனமானது தனது Carl Gustaf M4 ரக ராக்கெட் லாஞ்சர்களை இந்தியாவில் தயாரிக்க முடிவு செய்துள்ளது, இதுவரை இந்தியாவை தவிர உலகில் வேறேந்த நாட்டிலும் இதை ஸ்வீடன் செய்யவில்லை.

இதற்காக தற்போது இந்தியாவில் சாப் நிறுவனமானது SAAB FFV India எனும் நிறுவனத்தை துவங்க உள்ளது தற்போது இந்த நிறுவனம் பதிவு செய்யும் நிலையில் உள்ளதாகவும் ஒரு தொழிற்சாலை இதற்கென அமைக்கப்பட உள்ளதாகவும் சாப் நிறுவனத்தின் விற்பனை பிரிவு தலைவர் கோர்கன் ஜோஹான்சன் தெரிவித்தார்.

ஏற்கனவே முந்தைய கார்ல் குஸ்தாவ் ராக்கெட் லாஞ்சர்களை இந்திய ராணுவம் மற்றும் துணை ராணுவ படைகள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி நன்மதிப்பை பெற்றுள்ள நிலையில் தற்போது இந்த புதிய அதிநவீன கார்ல் குஸ்தாவ் எம்4 ராக்கெட் லாஞ்சர்கள் இந்தியாவில் தயாரித்து படைகளுக்கு வழங்கப்பட உள்ளன.

7 கிலோ எடை கொண்ட இந்த ஆயுதத்தை ஒரு வீரர் சுமந்து தாக்குதல் நடத்த முடியும்.கவச வாகனங்கள், டாங்கிகள், வாகனங்கள், பங்கர்கள், கட்டிடங்கள் போன்ற பல்வேறு வகையான இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்க இந்த ஆயுதம் உதவும்.

இந்த ஆயுதத்தில் Advanced Fire Control System அதாவது அதிநவீன தாக்குதல் கட்டுபாட்டு அமைப்பு உள்ளது மேலும் தெர்மல், தொலைதூர, லேசர் குறிபார்க்கும் அமைப்புகளை இணைத்து பயன்படுத்தி கொள்ளலாம் கூடவே காற்றழுத்தம் மற்றும் தட்பவெப்ப உணர் கருவி, இரவில் பார்க்கும் வசதி ஆகியவையும் உள்ளன.

இதில் பயன்படுத்தப்படும் குண்டுகள் அனைத்தும் 84 மில்லிமீட்டர் அளவிலானவை, இதில் HEAT – High Explosive Anti Tank, HEDP – High Explosive Dual Purpose, Illumination (ஒளிவீச்சு) மற்றும் புகை மண்டலம் உருவாக்கும் குண்டுகளை பயன்படுத்தி கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.