சுதேசி போர் விமான திட்டங்களில் சுமார் 10 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்யும் இந்தியா !!
அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியா பல கட்டங்களாக சுமார் 10 பில்லியன் டாலர்கள் அளவிலான பணத்தை இந்தியாவின் சுதேசி போர் விமான திட்டங்களில் முதலீடு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் அடுத்த 20 ஆண்டுகளில் சுமார் 400 இந்திய தயாரிப்பு போர் விமானங்கள் வரை வாங்கப்படும் எனவும் அதன் மூலமாக நம் நாட்டின் ஏரோஸ்பேஸ் துறைக்கு சுமார் 20 பில்லியன் டாலர்கள் அளவிலான ஆர்டர்கள் கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது.
சமீபத்தில் Tejas MK2 தேஜாஸ் மார்க்-2 திட்டத்திற்கு 10,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில், அடுத்த ஆண்டு AMCA ஆம்கா திட்டத்திற்கு 15,000 கோடி ரூபாய் மற்றும் 2025ஆம் ஆண்டில் TEDBF திட்டத்திற்கு 13,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படலாம் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்தியா ஃபிரான்ஸ் அல்லது இங்கிலாந்துடன் இணைந்து ஒரு புதிய என்ஜினை உருவாக்கவும், அதன் தயாரிப்பில் இந்திய தனியார் நிறுவனங்களை ஈடுபடுத்தும் சூழலை ஏற்படுத்தவும் சுமார் 5 பில்லியன் டாலர்கள் பணத்தை முதல்கட்டமாக முதலீடு செய்ய உள்ளது கூடுதல் தகவல் ஆகும்.