சமீபத்தில் தலைநகர் தில்லியில் அமைந்துள்ள USI – United Service Institute மையத்தில் நடைபெற்ற மேஜர் சமீர் சின்ஹா கருத்தரங்கில் இந்திய விமானப்படை தலைமை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் விவேக் ராம் சவுதிரி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் இந்திய விமானப்படை சுமார் 127 உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரிக்கப்பட்ட MALE – Medium Altitude Long Endurance அதாவது இடைத்தூர உயரத்தில் நீண்ட நேரம் பறக்கும் ஆளில்லா விமானங்களை படையில் இணைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்திய விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் விவேக் ராம் சவுதிரி எந்த ஆளில்லா விமானம் என்பதை குறிப்பிடவில்லை ஆனால் தற்போது நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் DRDO தயாரித்துள்ள TAPAS சோதனைகளை நிறைவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் முதல்கட்டமாக இந்திய விமானப்படை 16 TAPAS ரக ஆளில்லா விமானங்களையும், Rustom-1 எனப்படும் ஆளில்லா விமானத்தின் மற்றொரு ரகமான ARCHER எனப்படும் ஆயுதம் தாங்கிய ஆளில்லா விமானத்தையும் படையில் இணைக்க உள்ளது என்பது கூடுதல் தகவல் ஆகும்.