Breaking அர்மீனியா அஸர்பெய்ஜான் போர்; 2000 கோடி மதிப்பிலான ஆயுதங்களை அர்மீனியாவுக்கு ஏற்றுமதி செய்யும் இந்தியா !!

அர்மீனியா மற்றும் அஸர்பெய்ஜான் இடையேயான போர் நடைபெற்று வரும் நேரத்தில் இந்தியா அர்மீனியா நாட்டிற்கு உடனடியாக சுமார் 2000 கோடி மதிப்பிலான ஆயுதங்களை ஏற்றுமதி செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது.

அவசரகால அடிப்படையில் இரு நாட்டு அரசுகளும் இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டு உள்ளன. அதன்படி ராக்கெட்டுகள், ஏவுகணைகள் மற்றும் பல்வேறு வகையான குண்டுகள் அர்மீனியாவுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன குறிப்பாக பினாகா பல குழல் ராக்கெட் லாஞ்சர்கள் மற்றும் ராக்கெட்டுகள் முதல்முறையாக ஏற்றுமதி செய்யப்பட உள்ளன.

டாங்கிகளை அழிக்கும் சிறப்பு ராக்கெட்டுகளும் இந்த ஏற்றுமதி ஒப்பந்த்தில் அடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன, கடந்த 2020ஆம் ஆண்டு அர்மீனியாவுக்கு 350 கோடி மதிப்பிலான Swathi ஸ்வாதி ரேடார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்திய அரசு வருகிற 2025ஆம் ஆண்டிற்குள் ஆயுத மற்றும் ராணுவ தளவாட ஏற்றுமதி மூலமாக சுமார் 35,000 கோடி ரூபாய் வருமானம் ஈட்ட இலக்கு நிர்ணயம் செய்துள்ளதும் கடந்த ஆண்டு 13,000 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி நடைபெற்று உள்ளதும் கூடுதல் தகவல்கள் ஆகும்.