சீனாவை மனதில் வைத்து மேலும் 100 K9 வஜ்ரா தானியங்கி பிரங்கிகளை வாங்க முடிவு !!

  • Tamil Defense
  • September 28, 2022
  • Comments Off on சீனாவை மனதில் வைத்து மேலும் 100 K9 வஜ்ரா தானியங்கி பிரங்கிகளை வாங்க முடிவு !!

சீனாவை மனதில் வைத்து வடக்கு பிராந்திய எல்லையோரம் களமிறக்க Larsen & Toubro லார்சன் அன்ட் டூப்ரோ நிறுவனத்திடம் இருந்து மேலும் 100 K9 VAJRA வஜ்ரா தானியங்கி பிரங்கிகளை வாங்க இந்திய தரைப்படை முடிவு செய்துள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு தென்கொரியாவின் Hanwha நிறுவனத்திடம் இருந்து தொழில்நுட்பம் பெற்று L & T நிறுவனம் இந்த பிரங்கிகளை தயாரிக்கும் பணியை தொடங்கியது முதல் தொகுதியின் 100 பிரங்கிகள் கடந்த ஆண்டு டெலிவரி செய்யப்பட்ட நிலையில் இது இரண்டாவது தொகுதியாகும்.

தற்போது இந்த தானியங்கி பிரங்கிகளில் 50 சதவிகிதம் அளவுக்கு உள்நாட்டு தொழில்நுட்ப அமைப்புகள் உள்ளன, இந்த நிலையில் தற்போது முழுவதும் சுதேசி மயமாக்கும் பணிகள் துவங்கி உள்ளன முதல்கட்டமாக 14 தென்கொரிய அமைப்புகளை மாற்றி அவற்றிற்கு பதிலாக இந்திய தயாரிப்பு அமைப்புகளை பொருத்த உள்ளனர்.

அதே போல் தரைப்படை 155 மில்லிமீட்டர் அளவும் 52 காலிபர் திறனும் கொண்ட ATAGS Advanced Towed Artillery Gun System பிரங்கிகளின் மீதமுள்ள சோதனைகளை விரைந்து முடித்துவிட்டு படையில் இணைக்கும் நடவடிக்கைகளை துவங்க முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.