சுதேசி QRSAM வான் பாதுகாப்பு ஏவுகணைகளை படையில் இணைப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல் !!
1 min read

சுதேசி QRSAM வான் பாதுகாப்பு ஏவுகணைகளை படையில் இணைப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல் !!

Economic Times எகானமிக் டைம்ஸ் நாளேடு வெளியிட்டுள்ள செய்தியின்படி முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட QRSAM வான் பாதுகாப்பு ஏவுகணைகளை படையில் இணைப்பதில் மிகப்பெரிய தடங்கல் ஏற்பட்டுள்ளது.

அதாவது இந்த QRSAM – Quick Reaction Surface to Air Missile அதிவேக தாக்குதல் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பானது சோதனைகளின் போது இந்த அமைப்பின் ரேடார்கள் மிகவும் மோசமாக இயங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜூலை முதல் செப்டம்பர் வரை நடைபெற்ற இந்த சோதனைகளின் போது தாழ்வாக பறக்கும் ஹெலிகாப்டர்களை குறைந்த தூரத்தில் கண்டுபிடித்து தாக்க வேண்டும் ஆனால் ரேடார்களின் திறன் சரிவர இல்லாத காரணத்தால் இந்த சோதனைகள் முற்றிலுமாக தோல்வி அடைந்துள்ளன.

கண்காணிப்பு ரேடாரின் இந்த தோல்வி டாங்கிகளின் பிரதான ஆபத்தான தாக்குதல் ஹெலிகாப்டர்களிடம் இருந்து பாதுகாப்பு அளிக்க முடியாது என்பதை உணர்த்தி உள்ளது, இதுதவிர இந்த அமைப்பின் பல்வேறு பாகங்களின் தரமும் கேள்வி குறியாகி உள்ளது தினசரி அடிப்படையில் ரேடார், ஏவு வாகனம், கட்டளை வாகனம் ஆகியவற்றில் கோளாறுகள் ஏற்பட்டுள்ளது.

இந்த தோல்விகள் ஒரு பக்கம் மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்தாலும் ராணுவத்தின் தேவைகளை சந்திக்கவும் ராணுவத்தை திருப்திபடுத்தும் நோக்கத்திலும் விரைவாக கோளாறுகளை சரிசெய்து குறைகளை களைந்து அடுத்தக்கட்ட சோதனைகளை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.