தனது படை தளங்களை பாதுகாக்க 100 இந்திய தயாரிப்பு ட்ரோன்களை வாங்கும் இந்திய விமானப்படை !!

  • Tamil Defense
  • September 15, 2022
  • Comments Off on தனது படை தளங்களை பாதுகாக்க 100 இந்திய தயாரிப்பு ட்ரோன்களை வாங்கும் இந்திய விமானப்படை !!

கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஜம்மு நகரில் உள்ள இந்திய விமானப்படை தளத்தின் மீது வெடிகுண்டுகளை சுமந்து வந்த ஆளில்லா விமானங்கள் நடத்திய தாக்குதல் நாடு முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து இந்திய விமானப்படை தனது தளங்களை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது அதன் ஒரு பகுதியாக தற்போது 100 இந்திய தயாரிப்பு ஆளில்லா விமானங்களை வாங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த 100 ஆளில்லா விமானங்களும் இரவு மற்றும் பகலில் கண்காணிப்பு, உளவு, அடையாளம் காண்பது போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்படும், இவை EO- Electro Optical கருவிகள் மற்றும் வெப்ப உணர் (Thermal Imagers) கருவிகளை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

மேலும் இவை அதிக உயரங்களில் பறக்கக்கூடியவை ஆகவும் மிக அதிக தொலைவில் இருந்தாலும் ஒரு மனிதன் அளவிலான இலக்கை கூட துல்லியமாக கண்காணிக்கும் திறன் படைத்தவையாக இருக்கும் ஆகவே இவற்றை கொண்டு பயங்கரவாத மற்றும் ட்ரோன் தாக்குதல்களை முறியடிக்க முடியும் என விமானப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த திட்டம் ட்ரோன் எதிர்ப்பு திறன்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் ஈன எதிர்பார்க்கப்படும் நிலையில் இதற்கு முன்னர் இந்திய விமானப்படை 155 கோடி ரூபாய் மதிப்பில்ஹைதராபாத் நகரை தளமாக கொண்டு இயங்கி வரும் Zen Technologies நிறுவனத்துடன் ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகளை வாங்க ஒப்பந்தம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.