இந்திய விமானப்படை உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட நேத்ரா மார்க்-2 NETRA MK2 AWACS விமானங்கள் வரும் வரை ஏவாகஸ் AWACS – Airborne Warning & Control System அதாவது எச்சரிக்கை மற்றும் கட்டுபாட்டு அமைப்பு விமானங்களை குத்தகையில் எடுக்க திட்டமிட்டுள்ளது.
ஏர் இந்தியா நிறுவனம் பயன்படுத்தி வந்த ஆறு A321 ரக பயணிகள் விமானத்தில் நேத்ரா மார்க்-2 NETRA MK2 ரக AWACS அமைப்பை இணைத்து DRDO மேம்படுத்தி வருகிறது அவை 2026ஆம் ஆண்டு வாக்கில் படையில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய விமானப்படை முதலில் இரண்டு இஸ்ரேலிய ஃபால்கன் PHALCON AWACS அமைப்புகளை கூடுதலாக வாங்க திட்டமிட்டது ஆனால் அவற்றின் விலை அதிகமாக இருந்ததால் திட்டம் ரத்து செய்யப்பட்டது.
பின்னர் உள்நாட்டிலேயே முழுக்க முழுக்க தயாரிக்கப்பட்ட நேத்ரா மார்க்-1, NETRA MK1 ரக AWACS அமைப்புகளை எம்ப்ரேர் விமானங்களில் பொருத்தி பயன்படுத்தும் திட்டத்தில் லஞ்ச குற்றச்சாட்டு காரணமாக அதுவும் ரத்தானது குறிப்பிடத்தக்கது.