
ஃபிலிப்பைன்ஸ் தனது கடற்படைக்கென இரண்டு நடுத்தர ரக நீர்மூழ்கி கப்பல்களை சுமார் 70 பில்லியன் பிசோக்கள் மதிப்பில் கொள்முதல் செய்ய பல உலக நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
அதை தொடர்ந்து தற்போது இந்தியா, ஃபிரான்ஸ், தென் கொரியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் ஃபிலிப்பைன்ஸ் கடற்படைக்கான இந்த திட்டத்தில் தங்களது ஆர்வத்தை வெளிபடுத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஃபிரான்ஸ் தனது ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கி கப்பல், இந்தியா ஸ்கார்பீன் நீர்முழ்கியின் இந்திய வடிவமான கல்வரி நீர்மூழ்கி, தென் கொரியா தனது KSS-3 ரக நீர்மூழ்கி ஆகியவற்றை அளிக்க முன்வந்துள்ள நிலையில் துருக்கியின் ஆஃபர் பற்றிய தகவல்கள் ஏதும் தெரியவில்லை.