அமெரிக்காவை மீறி ஈரானில் எண்ணெய் கிணறு அமைக்கும் இந்தியா !!

  • Tamil Defense
  • September 28, 2022
  • Comments Off on அமெரிக்காவை மீறி ஈரானில் எண்ணெய் கிணறு அமைக்கும் இந்தியா !!

அமெரிக்காவின் CAATSA சட்டத்தையும் மீறி இந்தியா தனது ONGC நிறுவனம் மூலமாக ஈரானில் பெர்சிய வளைகுடா பகுதியில் அமைந்துள்ள Farzad – B இயற்கை எரிவாயு வயலில் எண்ணெய் கிணறு ஒன்றை அமைக்க உள்ளது.

ஈரானிய அரசு இந்த எரிவாயு வயலில் எரிவாயு எடுக்கவும் அதன் அடுத்தகட்டமாக சுமார் 30% சலுகையும் தருவதாகவும் ஆனால் 90 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் இல்லையெல் இந்தியா புறக்கணித்தாக கருதப்படும் என அறிவித்த நிலையில் இந்தியா இதனை ஏற்று கொண்டுள்ளது.

கடந்த 2002 ஆம் ஆண்டு இந்தியா ஈரான் இடையே கையெழுத்தான ஒப்பந்த்தின்படி இந்தியாவின் ONGC 2008ஆம் ஆண்டில் பெர்சிய வளைகுடாவில் தேடிய போது இந்த எரிவாயு வயலை கண்டுபிடித்து கொடுத்தது, இந்த தேடலில் ONGC, OIL, IOC ஆகிய நிறுவனங்கள் கூட்டாக செயலாற்றின.

இந்த Farzad-B இயற்கை எரிவாயு வயலில் சுமார் 23 ட்ரில்லியன் க்யிபிக் அடி Cubic feet அளவிலான இயற்கை எரிவாயு இருப்பதும், இதில் 60% எரிவாயுவை எடுக்க முடியும் என்பதும் நாள் ஒன்றுக்கு 5000 பேரல் எரிவாயு எடுக்கப்படுவதும் கூடுதல் தகவல் ஆகும்.