1 min read
புதிய ஏவுகணை சோதனைக்கான அறிவிப்பை வெளியிட்ட இந்தியா !!
இந்தியா Notice to Airman (NOTAM) எனும் ஏவுகணை சோதனைக்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது, 23 – 25 செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் இந்த சோதனை நடைபெறும்.
வங்க கடல் பகுதியில் ஒடிசாவில் இருந்து தெற்கே 1680 கிலோமீட்டர் தொலைவுக்கு ஏவுகணை பாயும் என NOTAM அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது, இது பலிஸ்டிக் ஏவுகணை சோதனையாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
அதாவது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சோதனை செய்யப்பட்ட அடுத்த தலைமுறை அக்னி பலிஸ்டிக் ஏவுகணையான AGNI P (PRIME) அக்னி ப்ரைம் ஏவுகணையின் மறு சோதனையாக இருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.