ரஷ்யா நடத்தும் கடல்சார் போர் பயிற்சியில் கலந்து கொள்ள மறுத்த இந்தியா; காரணம் என்ன ??

ரஷ்யாவில் நேற்று துவங்கிய VOSTOK 2022 ராணுவ போர் பயிற்சிகள் வருகிற 7ஆம் தேதி வரை நடைபெற உள்ளன, இதில் இந்தியாவும் கலந்து கொள்கிறது.

பல நாடுகளை சேர்ந்த சுமார் 50,000 வீரர்கள், 140 வெவ்வேறு வகையான வானூர்திகள் மற்றும் 60 வெவ்வேறு வகையான கடற்படை கலன்கள் பங்கு பெறும் நிலையில் இந்த பயிற்சிகள் ரஷ்யாவின் கிழக்கு பகுதியிலும், ஓகொட்ஸ்க் மற்றும் ஜப்பான் கடல் பகுதிகளில் நடைபெற உள்ளன.

இந்தியா இதில் தரைப்பகுதி போர் பயிற்சிகளில் மட்டுமே கலந்து கொள்கிறது ஆனால் கடல்சார் போர் பயிற்சிகளில் கலந்து கொள்ள ரஷ்யா விடுத்த அழைப்பை ஏற்று கொள்ளாமல் மறுப்பு தெரிவித்து உள்ளதாக தகவல்கள் இந்திய பாதுகாப்பு அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு காரணம் ரஷ்யா ஜப்பானுக்கு சொந்தமான குரில் தீவுகளுக்கு அருகே கடற்படை பயிற்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளது, இந்த தீவுகளை ரஷ்யாவும் உரிமை கோரி வருவகிறது ஆகவே ஜப்பானை வருத்தப்படும் நிலைக்கு தள்ளுவதை இந்தியா விரும்பவில்லை.

மேலும் இந்தியா ஜப்பான் இடையே பல்வேறு மட்டங்களில் துறைகளில் நல்லுறவு நீடித்து வருகிறது, இது தவிர இந்தியாவும் ஜப்பானும் சீனாவை எதிர்க்கும் QUAD அமைப்பின் உறுப்பு நாடுகளாகும், ஆகவே மேற்குறிப்பிட்ட கடல்சார் பயிற்சிகளை இந்தியா புறக்கணித்து உள்ளது என கூறப்படுகிறது.