ரஷ்யா உடனான எண்ணெய் மற்றும் ஆயுத வர்த்தகம் தொடர்பாக இந்தியாவுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை !!

  • Tamil Defense
  • September 23, 2022
  • Comments Off on ரஷ்யா உடனான எண்ணெய் மற்றும் ஆயுத வர்த்தகம் தொடர்பாக இந்தியாவுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை !!

சமீபத்தில் அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் ரஷ்யா உடனான எண்ணெய் மற்றும் ஆயுத வர்த்தகம் தொடர்பாக இந்தியா உடன் தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக CNN தொலைக்காட்சி ஊடகவியலாளரிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த அதிகாரி பேசும்போது ரஷ்யாவால் இனிமேலும் ஆயுதம் விற்பனை செய்ய முடியாது எனும் நிலையை இந்தியர்கள் உணர்ந்துள்ளதாகவும் ஆகவே வேறு நாடுகளிடம் இருந்து ஆயுதம் வாங்குவதையும் அதன் மூலம் கிடைக்கும் நன்மைகளை பற்றியும் இந்திய தரப்பு சிந்தித்து வருவதாகவும் கூறினார்.

கடந்த 40 ஆண்டு காலமாக இந்தியா ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் ஆயுதங்களை வாங்கி வருகிறது தற்போது கச்சா எண்ணெயையும் அதிக அளவில் வாங்கி வருகிறது இதனால் அதில் இருந்து விடபட இந்தியாவுக்கு நாங்கள் உதவ தயாராக உள்ளோம் எனவும் கூறியுள்ளார்.