இந்திய தரைப்படைக்கு உலகின் மிகப்பெரிய Swarm Drone அமைப்பை தயாரிக்கும் தில்லி ஐஐடி !!
1 min read

இந்திய தரைப்படைக்கு உலகின் மிகப்பெரிய Swarm Drone அமைப்பை தயாரிக்கும் தில்லி ஐஐடி !!

IIT Delhi தில்லி ஐஐடியின் ஒரு பிரிவான BotLab Dynamics எனும் நிறுவனம் இந்திய தரைப்படைக்கு சுமார் 3500 Swarm Drone குழுவாக இயங்கும் ஆளில்லா விமானங்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

இந்த அமைப்பு உலக வரலாற்றிலேயே இதுவரை உருவாக்கப்பட்ட மிகப்பெரிய Swarm Drone அமைப்புகளில் ஒன்றாக இருக்கும், மேலும் Swarm Drone குழுவாக இயங்கும் ஆளில்லா விமான போர்முறையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

இந்த 3500 ஆளில்லா விமானங்களும் AI Artificial Intelligence எனப்படும் சுய நுண்ணறிவு திறன் மூலம் ஒருங்கிணைந்து செயல்பட்டு தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை கனகச்சிதமாக செய்து முடிக்கும் இவற்றை தாக்குதல் மற்றும் தற்காப்பு என இரண்டு வகையான பணிகளில் சிறப்பாக பயன்படுத்தி கொள்ள முடியும் என்பது இவற்றின் சிறப்பம்சம் ஆகும்.

இந்த 3500 ஆளில்லா விமானங்களை கொண்ட Swarm Drone அமைப்பை உருவாக்கிய பிறகு அடுத்தகட்டமாக சுமார் 7500 ட்ரோன்களை கொண்ட மிகப்பெரிய Swarm Drone அமைப்பை உருவாக்க BotLab Dynamics நிறுவனம் திட்டமிட்டுள்ளது, அது நிறைவேறும் பட்சத்தில் உலகின் இரண்டு சக்திவாய்ந்த Swarm Drone கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம்பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய தரைப்படையும் Swarm Drone தொழில்நுட்பத்தை இன்றியமையாத தொழில்நுட்பமாக கருதுகிறது மேலும் அதனுடைய அளவில்லா ஆற்றலை எதிர்கால சண்டைகளில் நன்கு பயன்படுத்தி கொள்ள முடியும் எனவும் அதற்காகவே இரண்டு நிறுவனங்களிடம் இருந்து ஏற்கனவே பலம் சேர்க்கும் இந்த அமைப்புகளை கொள்முதல் செய்துள்ளது கூடுதல் தகவல் ஆகும்.