இந்திய விமானப்படையின் சுகோய் – 30 Su-30MKI போர் விமானங்களின் மேம்பாட்டு திட்டங்களின் ஒரு பகுதியாக அடுத்த தலைமுறை ஏவுகணைகள் வாங்கும் பொருட்டு ஐரோப்பிய ஏவுகணைகளை வாங்க இந்திய விமானப்படை முடிவு செய்துள்ளது.
ஏற்கனவே இந்தியாவிலேயே முழுவதும் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட Astra Mk1 ஏவுகணைகளை தொடர்ந்து அடுத்தபடியாக இஸ்ரேலிய Derby-I BVRAAM ஏவுகணைகளும் இணைக்கப்பட உள்ளன.
இதையடுத்து விரைவில் ஐரோப்பிய தயாரிப்பு வெப்பத்தை உணரும் திறன் கொண்ட ASRAAM Advanced Short Range Air to Air Missile அதாவது அதிநவீன குறுந்தூர வான் தாக்குதல் ஏவுகணைகளின் சோதனைகள் துவங்க உள்ளதாகவும்,
ஏற்கனவே Ground Flutter சோதனைகளை ASRAAM ஏவுகணை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள நிலையில், அடுத்தகட்டமாக விமானத்தில் சுமந்து செல்லும் Captive Trials மற்றும் Aerial Release தாக்குதல் சோதனைகள் 2023ல் நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேலிய Python-5 எனப்படும் வெப்ப உணர் கருவி கொண்ட குறுந்தூர வான் தாக்குதல் ஏவுகணைகளை இந்திய விமானப்படையின் Tejas mk1, Tejas Mk2 தேஜாஸ் மார்க-1, மார்க்-2 ஆகிய இரண்டு வகையான விமானங்களிலும் பயன்படுத்தி கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய விமானப்படை தனது ரஷ்ய தயாரிப்பு போர் விமானங்களில் கூட ரஷ்ய ஏவுகணைகளை மாற்றி விட்டு மாறாக மேற்கத்திய தயாரிப்பு ஏவுகணைகளை அதுவும் Astra Mk2, Astra Mk3 அஸ்திரா மார்க்-2, மார்க்-3 ஏவுகணைகளை இணைக்கவும் திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.