QRSAM குறுந்தூர வான் பாதுகாப்பு அமைப்புகளில் ஆர்வம் காட்டாத இந்திய விமானப்படை !!

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் DRDO முழுக்க முழுக்க இந்நியாவிலேயே வடிவமைத்து தயாரித்தது தான் QRSAM குறுந்தூர வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு.

இந்த QRSAM வான் பாதுகாப்பு அமைப்பானது இந்திய தரைப்படையின் தேவைக்கேற்ப வடிவமைக்கப்பட்டதாகும், தற்போது இந்த QRSAM அமைப்பு தான் நாட்டின் முதல் ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு அமைப்பாகும்.

இந்திய விமானப்படை ஏற்கனவே சுமார் 8 படையணிகள் அளவில் ஆகாஷ் மார்க்-1 வான் பாதுகாப்பு அமைப்புகளை படையில் இணைத்து பயன்படுத்தி வருகிறது, மேலும் அடுத்த தலைமுறை ஆகாஷ் AKASH NG ஏவுகணைகளை படையில் இணைக்க திட்டமிட்டுள்ளது.

மேலும் இந்திய இஸ்ரேலிய கூட்டு தயாரிப்பில் உருவான MRSAM இடைத்தூர வான் பாதுகாப்பு ஏவுகணைகளில் 18 படையணிகளை சேர்க்க ஒப்பந்தம் செய்து உள்ள நிலையில் 5 படையணி அளவிலான S-400 அமைப்புகளையும் படையில் இணைத்து வருவது குறிப்பிடத்தக்கது.