இந்திய விமானப்படையின் முதல் பெண் ஆயுத கட்டுபாட்டு அமைப்பு போர் விமானி வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு !!

  • Tamil Defense
  • September 30, 2022
  • Comments Off on இந்திய விமானப்படையின் முதல் பெண் ஆயுத கட்டுபாட்டு அமைப்பு போர் விமானி வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு !!

இரட்டை இருக்கை போர் விமானங்களில் பொதுவாக இரண்டாவது இருக்கையில் இருக்கும் விமானி போர் விமானத்தின் ஆயுதங்கள் மற்றும் அவை சாரந்த சென்சார் அமைப்புகளை தயாராக வைத்திருக்கும் பணியை மேற்கொள்வர், இவர்களை WSO Weapon Systems Officer ஆயுத அமைப்பு அதிகாரி என அழைப்பர்.

இந்திய விமானப்படையில் இதுவரை ஆண் அதிகாரிகள் தான் இந்த பணியை செய்து வந்தனர் இந்த நிலையில் முதல்முறையாக ஒரு பெண் அதிகாரி இந்த பணியை மேற்கொள்ள பயிற்றுவிக்கப்பட்டு பணியமர்த்தப்பட்டுள்ளார்.

ஃப்ளைட் லெஃப்டினன்ட் தேஜஸ்வி ரங்கா ராவ் தான் அவர், இவர் வேற்று மாநிலத்தை சேர்ந்தவர் தந்தை பணி காரணமாக சென்னை வந்த இவர் சென்னையில் பள்ளி கல்வி மற்றும் உயர்கல்வி ஆகியவற்றை முடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது போர் விமானத்தை இயக்கும் முதன்மை விமானியும் ஒரு பெண் அதிகாரி ஆவார் ஃப்ளைட் லெஃப்டினன்ட் சாக்ஷ்யா பாஜ்பாய் தான் அவர் இருவரும் இணைந்து இந்திய விமானப்படை வரலாற்றில் மற்றுமொரு சாதனை புரிந்துள்ளனர்.

அதாவது இரட்டை இருக்கை போர் விமானத்தை இயக்கும் பெண்கள் என்பது தான் அது, சீன எல்லையோரம் உள்ள மிக முக்கியமான விமானப்படை தளமான தேஸ்பூர் படைத்தளத்தில் இருந்து இவர்கள் இயங்கி வருவது கூடுதல் சிறப்பாகும்.