இந்திய கடற்படை தொடர்ந்து மத்திய அரசிடம் மூன்றாவது விமானந்தாங்கி கப்பலுக்கு அனுமதி அளிக்குமாறு வலியுறுத்தி வரும் நேரத்தில் அது சார்ந்த மிகவும் முக்கியமான ஒரு நிகழ்வு சத்தமில்லாமல் நடைபெற்றுள்ளது.
அதாவது இந்தியாவிலேயே வடிவமைத்து கட்டப்படும் சுதேசி கடற்படை கப்பல்களின் வடிவமைப்பு பணிகளை Warship Design Bureau எனும் போர் கப்பல் வடிவமைப்பு முகமை தான் மேற்கொள்ளும், தற்போது அந்த அமைப்பிடம் மூன்றாவது விமானந்தாங்கி கப்பலுக்கான CATOBAR அமைப்பு மற்றும் அதன் தொழில்நுட்பத்தை வடிவமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
CATOBAR – Catapult Assisted Takeoff but Arrested Recovery அதாவது ஒருவீசும் அமைப்பின் மூலம் போர் விமானங்கள் கப்பலில் இருந்து வானில் ஏவப்படும் ஆனால் தரை இறங்குகையில் ஒரு இரும்பு கயிற்றில் விமானத்தின் வால் பகுதியில் உள்ள கொக்கியை இணைத்து நிறுத்தும் தொழில்நுட்ப அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்திய கடற்படையில் உள்ள விக்ரமாதித்யா மற்றும் விக்ராந்த் விமானந்தாங்கி கப்பல்களில் STOBAR அமைப்பு தான் உள்ளது, அதாவது Short Takeoff but Arrested Recovery அதாவது குறுகிய தூரத்திலேயே வானில் மேலேழும்ப உதவும் அமைப்பு மற்றும் கயிற்றில் கொக்கி மாட்டி தரை இறங்கும் அமைப்பு தான் உள்ளது.
இந்திய கடற்படை தனது மூன்றாவது விமானந்தாங்கி கப்பலில் இருந்து AWACS, UCAV ஆகிய விமானங்களையும் இயக்க விரும்புகிறது ஆனால் அதற்கு கப்பலின் அளவும் பெரிதாக இருக்க வேண்டும் CATOBAR அமைப்பும் தேவை, கப்பலின் எடையும் 65,000 டன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க கடற்படை , ஃபிரெஞ்சு கடற்படை கப்பல்கள் CATOBAR அமைப்பை ஏற்கனவே பயன்படுத்தி வருகின்றன, தற்போது அதிநவீன EMALS அமைப்பு வந்துள்ளது இது அமெரிக்காவின் புத்தம் புதிய Gerald R Ford ரக கப்பலில் உள்ளது.
தொடர்ந்து சீனா கட்டி வரும் Type – 003 மற்றும் ஃபிரான்ஸ் இனி கட்ட உள்ள விமானந்தாங்கி கப்பல்களிலும் இந்த அமைப்பு பயன்படுத்தப்பட உள்ளது இதற்கு கப்பல் அணுசக்தியால் இயங்கும் திறன் கொண்டதாக இருக்க வேண்டும் என்பது கூடுதல் தகவல் ஆகும்.