விளம்பரப்படுத்துவதில் அடியோடு குறை – இந்தியாவின் நிலை
இந்தியாவின் மிகப்பெரிய வானூர்தி தயாரிப்பு நிறுவனமான HAL Hindustan Aeronautics Limited தனது தயாரிப்புகளை பற்றிய விளம்பரம் செய்வதில் அடியோடு கோட்டை விடுகிறது, இதனாலேயே சர்வதேச சந்தையில் பலத்த பின்னடைவை இந்தியா சந்தித்து வருகிறது.
சமீபத்தில் கூட தேஜாஸை விடவும் திறன் மற்றும் பாதுகாப்பு குறைந்த தென்கொரிய FA-50 மலேசிய விமானப்படை தேர்வில் முன்னனியில் இருப்பதாக செய்திகள் வெளியாகின இதற்கு அந்நாட்டு விமானப்படை மற்றும் FA-50ஐ தயாரிக்கும் KAI Korean Aerospace Industries நிறுவனத்தின் செயல்பாடுகளுமே காரணம் ஆகும்.
KAI நிறுவனம் விளம்பரம் செய்து தனது தயாரிப்புகளை ஒரு நாட்டின் படையினருக்கு மட்டும் காட்டாமல் அந்நாட்டு மக்களிடையேயும் பிரபலப்படுத்தும், அதே நேரத்தில் தென் கொரிய விமானப்படையின் சாகச குழு இந்த விமானங்களில் சாகசம் புரிந்து நல்ல சூழலை ஏற்படுத்துவது வழக்கம்.
அதே போல இந்தியாவின் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனமும் நல்ல முறையில் விளம்பரம் செய்ய வேண்டும் பின்னர் லாபி செய்ய வேண்டும், ஒரு சாகச விமான படையணியை சர்வதேச பாதுகாப்பு மற்றும் விமான கண்காட்சிகளில் பங்கேற்கு செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும்.
இந்தியா உலகின் ஐந்து முன்னனி ஆயுத ஏற்றுமதி நாடுகளின் வரிசையில் இடம்பிடிக்க ஆசைப்படுகிறது அது சாத்தியமாக வேண்டுமெனில் விளம்பரம், லாபி போன்ற யுத்திகளை கையாள்வது மிகவும் அவசியம் என்றால் மிகையல்ல.