உக்ரைன் ஸ்டைல் போர் துருக்கியை மிரட்டும் க்ரிஸ் !!

  • Tamil Defense
  • September 12, 2022
  • Comments Off on உக்ரைன் ஸ்டைல் போர் துருக்கியை மிரட்டும் க்ரிஸ் !!

துருக்கி மற்றும் க்ரீஸ் இடையே வான்பகுதி மற்றும் தீவுகள் சார்ந்த பிரச்சினை உள்ளது அதாவது துருக்கி க்ரீஸ் நாட்டுக்கு சொந்தமான பகுதிகளை உரிமை கோரி வருவதால் இரு நாடுகள் இடையே பிரச்சினை நீடித்து வருகிறது.

அதாவது துருக்கி ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவ்வப்போது பிரச்சினை செய்யும் நிலையில் க்ரீஸ் அப்படி மேற்கொண்டால் உக்ரைன் ஸ்டைல் போர் நடக்கும் என மிரட்டல் விடுத்துள்ளது.

ஏஜியன் கடற்பகுதி மீதான உரிமைகள், வளங்கள் மற்றும் வான் பகுதி மீதான உரிமைகள் தொடர்பாக இரண்டு நேட்டோ உறுப்பு நாடுகளும் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றன.

இதுபற்றி போஸ்னிய தலைநகர் செராஜேவோ நகரில் பேட்டியளித்த துருக்கி அதிபர் எர்டோகான் இது வெற்று மிரட்டல் தான் ஆனால் தீடிரென ஒருநாள் போர் மூளவும் வாய்ப்புகள் உள்ளதாக என கூறியுள்ளார்.